சமந்தா இடத்தை தட்டி பறித்த வாரிசு நடிகை..  மீண்டும் அந்த பிரச்சனையால் அவதிப்படும் வொய்ட் பியூட்டி!

She is the successor actress who snatched Samantha’s place in Chennai Story: தமிழ் சினிமாவின் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக படு வேகமாக வளர்ந்து வந்தார் நம்ம பல்லாவரத்து பொண்ணு சமந்தா.

தமிழ் மற்றும் தெலுங்கில் படங்கள், வெப் தொடர்கள் என எப்போதுமே பிசியாக இருந்த சமந்தாவிற்கு யார் கண் பட்டதோ உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

மயோசிடிஸ் எனப்படும் தோல் பிரச்சனையால் அவதிப்படும் சமந்தா,  வெளிநாடுகளுக்குச் சென்று இயற்கை வைத்தியம் மேற்கொண்டு வந்தார். 

ஓரளவு சரியாகவே மீண்டும் நடிப்புக்கு திரும்பி தனது தடத்தை பதிக்க ஆரம்பித்தார். 

புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய பாடல் சர்ச்சையை கிளப்பியது. எதற்கும் அசராமல் தன் பாதைகளில் முட்டுக்கட்டையாக விழும் விமர்சனங்களை தூக்கி எறிந்து முன்னேறி சென்றார்.

சமீபத்தில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க சமந்தாவிற்கு வாய்ப்புக் கிட்டியது. சென்னையை பூர்வீகமாக கொண்ட ஆங்கில எழுத்தாளர் முராரி என்பவரின் “அரேஞ்ச்மென்ட் ஆப் லவ்” என்கின்ற நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான்.

மயோசிடிஸ் பிரச்சனையினால் ஹாலிவுட் படத்தில் இருந்து விலகிக் கொண்ட சமந்தா

இதில் துப்பறியும் கதாபாத்திரமாக சமந்தாவை நடிக்க வைக்க பேசப்பட்டது. சமந்தாவும் ஓகே சொல்லி கமிட்டான நிலையில்,  மீண்டும் தலை தூக்கிய மயோசிடிஸ் பிரச்சனையால், இப்படத்திலிருந்து விலகினார் சமந்தா.

இதற்குப் பின் இந்த கதாபாத்திரல் சமந்தாவிற்கு பதில் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் மகிழ்ந்த ஸ்ருதிஹாசன் சென்னை பெண்ணாக இருப்பதால் இதில் நடிக்க பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

“சென்னை ஸ்டோரி” என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சுருதிஹாசன் உடன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இங்கிலாந்து நடிகர் விவேக் கல்ரா மற்றும் ஜான் ரெனோ முதலானோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்