வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாலிவுட் போயும் வேலையை காட்டிய அட்லி.. ரஜினி ஸ்டைலில் சண்டை போட்ட ஷாருக்கான், லீக்கான காட்சிகள்

அடுத்தடுத்த சரிவை சந்தித்து வந்த பாலிவுட்டை ஷாருக்கானின் பதான் திரைப்படம் தூக்கி நிறுத்தியது. பல கோடி லாபம் பார்த்த அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்து வரும் ஜவான் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. நம்ம ஊரு அட்லி இயக்கும் அந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகும் இப்படத்திலிருந்து முக்கியமான ஒரு சண்டைக் காட்சி இணையதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த காட்சி படு வேகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read: விஜய்யை கைகழுவி விட்ட அட்லீ.. வேறு ஹீரோவுக்கு வலை வீசிய ஜவான் படக்குழு

அதில் ஷாருக்கான் சுற்றி சுற்றி எதிரிகளை துவம்சம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் அவர் இரு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் அந்த காட்சியில் அவர் வயதான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிலும் வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு அவர் எதிரிகளை பந்தாடுவது ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

இப்படி இந்த வீடியோ காட்சிகள் ஒரு புறம் வைரலாகி கொண்டிருக்க மறுபுறம் அட்லி செய்த வேலையும் அம்பலமாகியுள்ளது. அதாவது இந்த காட்சி ஏற்கனவே படையப்பா திரைப்படத்தில் வந்த காட்சி தான். சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த அந்த படத்தின் ஒரு சண்டைக் காட்சியில் ரஜினி இப்படித்தான் கையில் மெட்டல் பெல்ட்டை வைத்துக்கொண்டு எதிரிகளை சம்ஹாரம் செய்வார்.

Also read: ஜவான் படத்தின் கேமியோ ரோலில் விஜய் இல்லை.. அண்ணனை தூக்கிட்டு அர்ஜுனுக்கு போட்ட ஸ்கெட்ச்

அதை அப்படியே சுட்டு பாலிவுட்டில் படமாக்கி இருக்கிறார் அட்லி. இதை பார்க்கும் போது பாலிவுட் போனாலும் இவர் சொந்தமாக எதையும் யோசிக்க மாட்டாரா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஏற்கனவே இவர் கோலிவுட்டில் எடுத்த கதைகள் அனைத்தும் பழைய படங்களின் காப்பி என்று கழுவி ஊற்றப்பட்டது அனைவரும் அறிந்தது தான்.

இருந்தாலும் அட்லி பிரம்மாண்ட பட்ஜெட், மாஸ் ஹீரோ என தன் வேலையில் கவனம் செலுத்தி வந்தார். அப்போதுதான் அவருக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் ஹிந்தியிலாவது இவர் சொந்த கதையை இயக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். அதை சுக்குநூறாக்கும் வகையில் இப்போது வெளிவந்திருக்கும் ஒரு காட்சியே படத்தில் இன்னும் என்னென்ன இருக்கிறதோ என்று நினைக்க வைத்துள்ளது.

Also read: நாளுக்கு நாள் எகிறும் ஜவான் படத்தின் பட்ஜெட்.. அட்லியால் விரயமாகும் பல கோடிகள்

- Advertisement -

Trending News