ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

செத்தா இப்படி சாகனும்.. என்னுடைய சாவு இப்படிதான் இருக்கனும்.. கடைசி ஆசையை சொன்ன ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கிறார். இந்தியா முழுக்க இவருக்கு என்று Fan base உள்ளது என்றே சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பையும் திறமையும் மெருகேற்றி, இன்றளவிலும், மார்க்கெட்டில் நம்பர் ஒன் பொசிஷனில் உள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டங்கி. எப்போது கமேற்சியாளாக மாஸ் படங்களை கொடுக்கும் நடிகர், இதில் வித்தியாசமாக நடித்திருப்பார். படம் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இவர் இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பின் விருதைப் பெற்ற அவர், தன்னை விருதுக்கு தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார்.

என் சாவு இப்படி தான் இருக்க வேண்டும்

நிருபர் பல கேள்விகள் கேட்க, அவை ஒவ்வொன்றுக்கா பதிலளித்த ஷாருக்கான் ஒரு கேள்வியாய் பார்த்து வியாப்படைந்ததோடு, தனது கடைசி ஆசையையும் வெளிப்படுத்தினார். நடிகர் ஷாருக்கானிடம் நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க விரும்புகிறீர்களா என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்க்கு பதிலளித்த ஷாருகான். “ஆம், நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு யாராவது ஆக்‌ஷன் சொல்ல வேண்டும். அப்போது நான் இறப்பது போல் நடிகக் வேண்டும். ஆனால், ஆக்‌ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்கக் கூடாது.

“நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும். இதுதான் எனது வாழ்நாள் கனவு எனக் கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.” இதன்மூலம் தனது தொழில் மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான காதல் தான் வெளிப்படுகிறது.

- Advertisement -

Trending News