அட்லியுடன் சேர்ந்து பீஸ்ட்-டை ரசித்த சூப்பர் ஸ்டார்.. வியப்பில் போட்ட வைரல் ட்வீட்

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தியேட்டரில் புக்கிங் ஓபன் செய்த அடுத்த 5 நிமிடத்தில் ரெட் மார்க் தெரிகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய டிரெய்லர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அதனைக் குறித்து பேசியுள்ளார்.

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாருக்கான், ஹிந்தியில் ரா என பீஸ்டின் டிரெய்லரை பகிர்ந்துள்ளார். மேலும், “என்னைப் போலவே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான அட்லி உடன் அமர்ந்திருக்கிறேன். பீஸ்ட் படத்திற்கு வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த குழுவிற்கும், டிரெய்லர் அற்புமாகத் தெரிகிறது. Leaner….. Meaner…… Stronger இருக்கிறது!!” என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் சில நொடிகளில் மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில் வைரலானது.

அவரது ட்வீட் மூலம், மறைமுகமாக ஷாருக்கான் தமிழ் திரைப்பட இயக்குனரான அட்லியுடன் தனது வரவிருக்கும் படம் குறித்து ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய வெற்றித் தொடரான ‘மணி ஹெயிஸ்ட்’ மூலம் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அட்லி இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் நெகடிவ் ரோலில் ராணா நடிக்கவுள்ளார். இந்தப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தற்போது ஷாருக்கான் பதான் என்னும் படத்தில் திபிகா படுகோனுடன் நடித்து வருகிறார்.

பீஸ்ட் படத்துடன் ஷாஹித் கபூரின் ‘ஜெர்சி’ மற்றும் யாஷின் ‘கேஜிஎஃப் 2’ ஆகியவற்றுடன் மோத உள்ளது. அண்மையில் வெளியான ‘அரபிக் குத்து’ மற்றும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ ஆகிய 2 பாடல்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கிற்குப் பிறகு மிகப்பெரிய ஹிட் ஆனதை அடுத்து இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த டார்க் காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.