என்னோட அடுத்த ரெண்டு படத்துக்கும் நீதாம்மா ஹீரோயின்.. 28 வயது நடிகையை புக் பண்ணிய ஷங்கர்

இந்தியன் 2 படத்தின் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஷங்கர். அந்த வகையில் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் எடுக்க முடிவு செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம்சரனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். தற்போது அதற்கான முதல்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஷங்கரின் சூப்பர் ஹிட் படமான அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங்கை வைத்து எடுக்க உள்ளார் ஷங்கர். இதற்கான பேச்சுவார்த்தையும் அண்மையில் முடிவடைந்தது.

இந்த இரண்டு படங்களுக்கும் பொதுவான அதே சமயத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஒருவர் படத்திற்கு அமைந்தால் நன்றாக இருக்கும் என கருதி தற்போது 28 வயதான கியாரா அத்வானி என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளாராம் ஷங்கர்.

kiara-advani-cinemapettai
kiara-advani-cinemapettai

கியாரா அத்வானி ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து தற்போது தெலுங்கிலும் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே கியாரா அத்வானி மற்றும் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பரத் எனும் நான் என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ராம்சரணுடன் வினயவிதேயராமா என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல சங்கர் என்ற ஒரு இயக்குனரின் மூலம் இரண்டு பிரம்மாண்ட படங்களை கைப்பற்றி விட்ட குஷியில் இருக்கிறாராம் கியாரா அத்வானி.

- Advertisement -