1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அடுத்த படம்.. ஷங்கருடன் சேரப்போகும் இரண்டு கதாநாயகர்கள்

பிரம்மாண்ட படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம் சரணை வைத்து ஆர்சி15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்திற்கான வேலை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஷங்கர் 1000 கோடி பட்ஜெட்டில் தனது கனவு படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தளவுக்கு தன்னுடைய படங்களில் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை காட்டியிருப்பார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதே ஷங்கர் தான். அதனாலே ஷங்கர் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இவர் இயக்கிய எந்திரன் மற்றும் 2.o படம் வசூல் வேட்டை ஆடியது.

இந்நிலையில் தற்போது சங்கர் நீருக்கடியில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இது அறிவியல் கலந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரம்மாண்டமாக தயாராக உள்ளதாம். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் ராம்சரண் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. மிகுந்த மன கஷ்டத்தில் இருந்த சங்கர் தனது அடுத்தடுத்த படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அதேபோல் ஹிந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை ஷங்கர் இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து ரித்திக் ரோஷன், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது மிக விரைவில் வெளியாகும்.

- Advertisement -