ஷங்கரின் கேரியரில் மிகப்பெரிய தோல்வியடைந்த படங்கள் இந்த 2 தான்.. அதுல ஒன்னு எல்லாருக்கும் ஃபேவரைட் ஆச்சே!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் தன்னுடைய சினிமா கேரியரில் இதுவரை இரண்டே இரண்டு தோல்வி படங்களை தான் கொடுத்துள்ளார். அவை என்ன என்பதை பார்ப்போம்.

ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். முதல் படமே பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதால் மொத்த சினிமாவின் கவனமும் அவர் மீது விழத் தொடங்கியது.

அதன் பிறகு காதலன் என்ற வெற்றிப்படம் கொடுத்திருந்தாலும் பின்னர் உலக நாயகன் கமலஹாசனுடன் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

தொடர்ந்து ஜீன்ஸ், முதல்வன் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் லாபகரமான இயக்குனராக வலம் வந்த சங்கர் முதல் முதலில் கொடுத்த தோல்வி படம் என்றால் அது நாயக் தான். தமிழில் அர்ஜுன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்.

nayak
nayak

தமிழில் வரவேற்பைப் பெற்ற அளவுக்கு இறுதியில் அந்தப் படம் வரவேற்பை பெறவில்லை. அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாய்ஸ். அன்றைய காலகட்டத்திற்கு தேவையான கதையாக இருந்தாலும் கொஞ்சம் வல்கராக இருந்ததால் படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் பாய்ஸ் படம் இன்று வரை பலருக்கும் ஃபேவரைட் என்பது மறுக்க முடியாத ஒன்று.

boys
boys

இந்த இரண்டு தோல்வி படங்களுக்குப் பிறகு சுதாரித்துக் கொண்ட சங்கர் தற்போது வரை தோல்விப்படம் கொடுக்காமல் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் தோல்வி சங்கரை மிகவும் யோசிக்க வைத்ததாக அவருடன் அந்த கால கட்டங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பலரும் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்