ராஜமவுலி கிட்ட நெருங்க கூட முடியாத சங்கர்.. இன்று வரை இருக்கும் பெரிய ஏக்கம்

தமிழில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ஷங்கர் கமலை வைத்து இப்போது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இப்போதே பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோன்று அவர் தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படமும் மெகா பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தமிழில் சங்கர் எப்படி பிரம்மாண்ட இயக்குனர் என்று வலம் வருகிறாரோ அதேபோன்று தெலுங்கில் ராஜமவுலி தான் பிரம்மாண்ட இயக்குனர். பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

Also read:சூர்யா தவறவிட்ட 5 ஹிட் படங்கள்.. கைநழுவிப்போன ராஜமவுலியின் பட வாய்ப்பு

இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரேஞ்சுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் படங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த படங்கள் அனைத்தும் வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகிறது. ஆனாலும் சங்கருக்கு ஒரு பெரிய ஏக்கம் இருக்கிறதாம்.

அதாவது ராஜமவுலி ஒரு திரைப்படம் எடுக்கப் போகிறார் என்று அறிவிப்பு கொடுத்தாலே அந்த படம் நிச்சயம் ஹிட் என்று பேசப்படுகிறது. அதேபோன்று 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை எடுத்து ஆயிரம் கோடி வரை அவர் இரு மடங்கு வசூல் லாபம் பார்த்து விடுகிறார்.

Also read:மணிரத்னத்தை பார்த்து வியந்துபோன ராஜமவுலி.. எழுந்து நின்ற சம்பவத்தை கூறிய ஜெயம் ரவி

ஆனால் இங்கே சங்கர் 200 கோடி ரூபாயில் படம் எடுத்து வசூலில் முன்னேற முடியாமல் திணறுகிறார். ராஜமவுலி சர்வசாதாரணமாக வசூலிக்கும் கலெக்ஷனை நம்மால் கஷ்டப்பட்டு கூட வசூலிக்க முடியவில்லை என்பது அவருக்கு ஒரு பெரிய குறையாக இருக்கிறது. இப்படி ராஜமௌலியின் நிலையும் ஷங்கரின் நிலையும் வெவ்வேறாக இருக்கிறது.

அதனால் அவர் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி திரைப்படமாக மாற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். அதற்காக அவர் இப்போது இரவு பகல் பாராமல் கடும் உழைப்பை கொடுத்து வருகிறார்.

Also read:சூர்யாவை தூக்கியெறிந்த சங்கர்.. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கப்போகும் பிரபல நடிகர்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -