மு க ஸ்டாலின் வெளியிட்ட திட்டங்களில் இந்த இரண்டும் சூப்பர்.. பாராட்டித் தள்ளும் இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்து வைத்துள்ள ஷங்கர் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மு க ஸ்டாலின் வெளியிட்ட 5 திட்டங்களில் குறிப்பிட்ட இரண்டு திட்டங்கள் சூப்பர் என கூறியுள்ளார்.

ஷங்கரின் படங்களில் எப்போதுமே அரசியலில் கலந்த கமர்ஷியல் இருக்கும். ஒவ்வொரு படத்திலும் மக்கள் என்னென்ன கஷ்டப்படுகிறார்கள் எனவும், அதை எப்படி சரி செய்யலாம் எனவும் படம் எடுப்பார்.

அதற்காக அரசியல் படங்கள் என்று சொல்லிவிட முடியாது. சமூக கருத்துக்கள் நிறைந்த கமர்சியல் படங்களாக இருந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் அறிவியல் சார்ந்த படங்களை எடுப்பதிலும் கைதேர்ந்தவர்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல படங்களில் குறிப்பாக முதல்வன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு க ஸ்டாலின், பதவியேற்ற முதல் நாள் ஐந்து திட்டங்களை செயல்படுத்தி கையெழுத்திட்டார்.

shankar-welcomes-mk-stalins-ideas
shankar-welcomes-mk-stalins-ideas

மு க ஸ்டாலின் வெளியிட்ட ஐந்து திட்டங்களில் குறிப்பாக கொரானா காலத்தில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்கள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டமும், பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டமும் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறி முக ஸ்டாலினை பாராட்டி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷங்கர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்