இளம் இயக்குனரிடம் கதை கேட்டு படம் எடுக்கும் சங்கர்.. அவர் இறந்ததிலிருந்தே மனுஷன் தடுமாறுகிறார்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னுடன் தோளுக்கு தோளாய் இருந்த பிரபலம் ஒருவர் இறந்ததிலிருந்தே சிறப்பான கதை அமையாமல் படங்களில் சொதப்பி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இளம் இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டு தஞ்சமடைந்துள்ளாராம்.

ஷங்கரின் படங்களில் பெரும்பாலான பங்கு அவரது எழுத்தாளர் சுஜாதாவுக்கு உண்டு. எழுத்தாளர் சுஜாதா வசனங்களிலும் சரி, திரைக்கதை அமைப்பிலும் சரி, அதேபோல் கதை அமைப்பிலும் சரி சங்கருக்கு உறுதுணையாக இருந்தவர்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே பட்டி தொட்டிகளில் பிரம்மாண்ட வெற்றியை குவித்த படங்கள். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு வெளியான ஷங்கர் படங்களில் அவர் இல்லாத குறை அப்பட்டமாக தெரிந்தது.

இந்நிலையில் ஒரு சரியான கதை அமையாமல் தடுமாறி வந்த இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கப்போகும் ராம்சரண் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை வாங்கி படமாக்கப் போவதாக செய்திகள் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன.

மேலும் ஷங்கரின் புதிய படம் முழுக்க முழுக்க அரசியல் அதிரடியில் உருவாக உள்ளதாம். முன்னதாக கமலஹாசனை வைத்து அரசியல் கலந்த சமூக அதிரடிகளை படமாக்கி வந்த சங்கர் அந்த படத்தை தடை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர் மற்றும் ராம் சரண் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் அதை எந்த விதத்திலும் ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறாராம் ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் அந்நியன் பட ரீமேக்கை ஷங்கர் இயக்க உள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

shankar-karthik-subbaraj-cinemapettai
shankar-karthik-subbaraj-cinemapettai

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -