இந்தியன் படத்தை விட 2 ஆம் பாகத்துக்கு கம்மியான சுவாரசியங்கள்.. சங்கர் சிக்கிக்கொண்ட விஷயங்கள்

இந்தியன் படம் வந்து கிட்டத்தட்ட 28 வருடங்கள் ஓடிவிட்டது. 1996ஆம் ஆண்டு வெளிவந்தது இந்தியன் படம். அந்த காலகட்டத்தில் இப்போது இருக்கிற மாதிரி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி கிடையாது. அதனால் மக்கள் சங்கரின் படத்தைப் பார்த்து மிரண்டு போனார்கள் பல கோடிகளை இறைத்து பிரமிப்பு காட்டினார்.

இந்தியன் படத்தில் ஒவ்வொரு பாடல்களிலும் கவனம் செலுத்தி நிறைய டெக்னாலஜிகளை புதிதாக இந்த படத்தில் கொண்டு வந்தார். அன்றைய காலகட்டத்தில் எல்லாமே பிரம்மிப்பூட்டும் வகையாக இருந்தது. வயதான கமலஹாசன் மற்றும் சுகன்யா இருவரது கெட்டப் பார்ப்பதற்கே ஆச்சரியமாக தோன்றியது.

சரியான நேரத்தில் சரியான கருத்துக்களை கொடுத்து விட வேண்டும் அதை சங்கர் செய்ய தவறிவிட்டார் என்று கூறலாம். அந்நியன் மற்றும் சிவாஜி படங்களை அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப டெக்னாலஜி வளரும் போதே, அப்படியே ட்ரெண்ட் செட்டில் உருவாக்கிய அசத்தினார்.

சங்கர் சிக்கிக்கொண்ட விஷயங்கள்

இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக பல போராட்டத்திற்கு பின் எடுத்து முடித்திருக்கிறார்கள். இதுவே இந்த படத்திற்கு ஒரு பின்னடைவாக அமைகிறது. ஆரம்பித்த வேகத்திலேயே இந்த படம் வந்திருக்குமேயானால் நிச்சயமாக அந்த பிரமிப்பு கலையாமல் இருந்திருக்கும். அதை செய்ய தவறிவிட்டார் சங்கர்.

இந்தியன் 2 முற்றிலும் ஊழல் சம்பந்தப்பட்ட கதைதான். இதைப் பற்றி நிறைய படங்கள் வந்துவிட்டது. இந்த பழைய பஞ்சாங்கத்தை வைத்து சங்கர் எப்படி ஜெயிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. 28 வருடங்கள் கழித்து அதே கதையை எப்படி யோசித்து எடுத்திருக்கிறார் என்பது புரியாத புதிர் தான்.

இந்தியன் முதல் பாகம் வந்த உடனேயே அடுத்த ஒன்று இரண்டு வருடங்களில் இந்தியன் 2 எடுத்திருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல வெற்றியை அடைந்திருக்கும். இவ்வளவு காலகட்டங்கள் இடைவேளைக்குப் பிறகு அதே பழமையான கதையை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

Next Story

- Advertisement -