வடக்கிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் தான் காஜல் அகர்வால். இவர் ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார்.
வெள்ளைத் தோலும் கொழு கொழு தேகமும் இருந்தால் கண்டிப்பாக தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தவர். எப்போதுமே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இப்படி சினிமாவில் ரவுண்ட் கட்டிக்கொண்டிருந்த காஜல் அகர்வால் 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் பிச்சனூர் கிட்ச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு தற்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து இருக்கிறது.
இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும்போது ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து நடிக்க முடியாது என படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஒரு சில பிரச்சனையால் 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது.
அதனால் காஜல் அகர்வாலுக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தார், ஆனால் தற்போது இந்தியன் 2 படத்திற்கு காஜல் அகர்வால் பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் செலவு இரட்டிப்பாக அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லையாம்.
இதைப்பற்றி காஜல் அகர்வாலிடம் கூறியபோதும், ‘நான் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்னை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்து விட்டாராம்’. குழந்தையை பார்த்துக்கொள்ள நேரம் செலவிட வேண்டும் என்றும் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டாராம். இதனால் ஷங்கர் மற்றும் படக்குழு விடை தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.