வாய்ப்பு கொடுத்ததுக்கு நீ செஞ்சிட்டல.. வெறியோடு கிளம்பிய ஷங்கர் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் ஜென்டில்மேன். 1993 இல் வெளியான இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, செந்தில், கவுண்டமணி, மனோரமா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை கே டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.

ஜென்டில்மேன் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தது. அர்ஜுனுக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. ஜென்டில்மேன் படம் ஷங்கரின் முதல் படத்திலேயே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர் குஞ்சு மோகன் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் வேறு படத்தில் பிஸியாக இருப்பதாக சொல்லி மறுத்து விட்டார்களாம். ஷங்கரின் வெற்றிக்கு ஏணியாக அமைந்த குஞ்சு மோகனின் பட வாய்ப்பை நிராகரித்தது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்றிவிட்ட ஏணியை தட்டி விடுவது என பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஜென்டில்மேன் படத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ளது ஜென்டில்மேன் 2. இதனால் புதுமுகங்களை வைத்து ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கவுள்ளார் குஞ்சு மோகன்.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முதல் மூன்று நபருக்கு தங்க காசு தரப்படும் என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். இதனால் பலரும் ஏ ஆர் ரகுமான், ஏ ஆர் ரஹ்மானின் மகன் அமீர் ரகுமான், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், கீரவாணி, டி இமான் என பல இசையமைப்பாளர்கள் பெயரை கூறி வந்தார்கள்.

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் பாகுபலி படத்தில் இசையமைத்த எம்எம் கீரவாணி இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை சரியாக கண்டு பிடித்த மூன்று வெற்றியாளர்களின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட்டு தங்க காசு தரப்பட உள்ளது.

ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளரை கண்டுபிடிப்பவர்களுக்கு தங்கக் காசு கொடுக்கும் நிலையில் இப்படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் என கொடுக்கப்படும்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்