அஜித்தின் ஹிட் பட டைட்டிலை காப்பியடிக்கும் ஷங்கர்.. கல்லா கட்ட பலே திட்டம்

ஷங்கர் திரை வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். தற்போது தான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு பல காலமாக நடந்து வருகிறது.

சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு நின்றபோன நிலையில் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து வரும் தில் ராஜு இப்படத்தையும் தயாரிக்கிறார்.

அதேபோல் வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் கடைசியாக ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் வசூலிலும் வேட்டையாடியது. தற்போது ஷங்கர் இயக்கும் படமும் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக தலைப்பை ஏற்பாடு செய்துள்ளாராம் ஷங்கர். ஏற்கனவே தளபதி 66 படமும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்படுவதால் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் ரசிகர்களை கவர்வதற்காக ஷங்கர் ஆர்சி 15 படத்திற்கு சிட்டிசன் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளாராம். அதாவது தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான சிட்டிசன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதனால் ராம்சரன் படத்திற்கும் இதே டைட்டிலை வைத்துவிடலாம் என்ற முடிவு செய்துள்ளார் ஷங்கர்.

இதனால் இப்படத்தில் ராம்சரணின் கதாபாத்திரமும் சிட்டிசன் என்று இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த டைட்டில் மூலமாகவே தமிழ் சினிமாவிலும் கல்லா கட்டிவிடலாம் என்ற திட்டத்தில் உள்ளார் ஷங்கர். விரைவில் இப்படத்துக்கான அதிகாரபூர்வ டைட்டில் வெளியாக உள்ளது.

- Advertisement -