உடலை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய அஜீத் மச்சினிச்சி ஷாம்லி.. வைரலாகும் புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாமிலி. இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.

1990-இல் அஞ்சலி என்ற படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து நேஷனல் பிலிம் விருதுகளை தட்டிச் சென்றார். அதற்குப் பின்னர் துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்னகண்ணம்மா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் பேபி சாமிலி.

அதற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை 2000-ல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்து இருப்பார், அதுதான் அவர் நடித்த கடைசிப்படம். ஆனால் தெலுங்கில் ஒரு சில வருடங்கள் நடித்தார்.

நடிப்பு வரவில்லை என்று அவரே முடிவு செய்துவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு சொக்க வைக்கும் சொப்பன சுந்தரியாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் திடீரென தன்னுடைய உடல் எடையை மொத்தமும் குறைத்து எலும்பும் தோலுமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

ஏற்கனவே ஷாமிலி முகம் வயதை விட கொஞ்சம் முதிர்ச்சியடைந்து காணப்படுவதால் தான் அவருக்கு வாய்ப்பு வருவதில்லை என கோலிவுட்டில் பரவலாக பேச்சுகள் உள்ள நிலையில் தற்போது உடல் எடையை குறைத்துள்ளது மேலும் அவரது சினிமா கேரியருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாம்.

shamili-cinemapettai
shamili-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்