அஜித் மறைத்து வைத்திருந்த காதல் ரகசியம்.. வெளிப்படையாக போட்டுடைத்த மச்சினிச்சி

கோலிவுட் வட்டாரத்தில் பிரபலமான திருமண ஜோடி என்றால் அது அஜித், ஷாலினி தான். சமீபத்தில் ஷாலினி, அஜித் ரொமான்டிக் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் அதே காதலுடன் இருவரும் தற்போது வரை வாழ்ந்து வருகிறார்கள்.

முதலில் அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் ஷாலினி, அஜித் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் காதலித்த போது நடந்த விஷயங்களை அஜித் எந்த நிகழ்ச்சியிலும் வெளிப்படையாகச் சொன்னதில்லை.

அஜித் எப்போதுமே சொந்த வாழ்க்கையை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர். அதனால்தான் அவர் எந்த சமூகவலைத்தள பக்கத்திலும் இல்லை. ஆனால் சில விழாக்கள் போது அஜித் குடும்பம் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகும். ஷாலினியை போல ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். இந்நிலையில் சமீபத்தில் அஜித் இத்தனை ஆண்டு ரகசியமாக வைத்திருந்த விஷயங்களை ஷாமிலி வெளிப்படையாக கூறியுள்ளார்.

அஜித் ஷாலினியை காதலிக்கும்போது பூக்களை கிப்ட்டாக அனுப்பி வைப்பாராம். அப்போது வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஷாமிலி தான் ஷாலினிடம் கொண்டு போய் சேர்பாராம். மேலும் இவர்களுடைய காதலுக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன்.

அஜித், ஷாலினி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முழு சுதந்திரம் கொடுத்து கொள்வார்கள். அவர்களைப் பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அஜித், ஷாலினி இடையே நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை ஷாமிலி ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.