தூக்கிவிட்ட மலையாள சினிமாவை தூக்கி எறிந்த ஷகிலா.. காரணத்தைக் கேட்டு கதிகலங்கிய ரசிகர்கள்!

80களில் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா. இவருடைய படங்கள் எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களை முறியடிக்கும் அளவுக்கு வசூலை தட்டி செல்லும்.

மேலும் இவருடைய புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் வீதியில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து ஜொள்ளு விடுவது என்றே ஒரு ரசிகர் கூட்டம் காத்துக் கிடக்கும்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது இல்லற வாழ்க்கை குறித்த இயல்பாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னை தூக்கி வளர்த்த மலையாள சினிமாவையே தற்போது விலக்கி வைத்துள்ளதாக ஷகிலா பேட்டி அளித்து இருப்பதால் ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

அதாவது, ஷகிலா தினமும் இரண்டு பெக் அடித்தால்தான் தூங்க முடியும் என்ற மனநிலையை கொண்டவராம். மேலும் தனது குடும்பத்தின் வறுமை சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக தான், தனது உறவினர்களின் எதிர்ப்பை மீறி சினிமாவில் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கர்ப்பு குறித்து ஷகிலா கூறியதாவது, ‘பழங்காலத்தில் ஒரு ஆணை, பெண் தலை நிமிர்ந்து பார்த்தாலே அவளின் கர்ப்பு பறிபோய் விட்டதாக கருதுவார்கள். ஆனால் தற்போது கர்ப்பு என்றால் உடல் சம்பந்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

shakeela-cinemapettai

மேலும் தன்னை ஒரு ‘ஆபாச குயின்’ என்று பலரும் பார்த்த காரணத்தினால் மலையாள படங்களில் தான் நடிப்பதை தவிர்த்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே மலையாள படங்களில் தன்னிடம் கூறுகின்ற கதை ஒன்றாகவும், ஆனால் எடுக்கப்படும் காட்சிகள் வேறொன்றாகவும் இருப்பதாகவும் கூறுகிறார்.

அதனால் தற்போது  மலையாளத் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து கொண்டதாக,  ஷகிலா தனது பேட்டியில் மூலம் மனம் திறந்து பேசியுள்ளார்.

- Advertisement -