ஜெயில் சாப்பாடு வேண்டாம். அடம் பிடிக்கும் ஷாருக்கான் மகன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் போதை பார்ட்டி கொண்டாடியதாக கைது செய்யப்பட்டார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தை ஒரு உலுக்கு உலுக்கியது என்றே சொல்லலாம். காரணம் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் பலரும் பெரிய பிரபலங்கள் ஆவர்.

ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களிலேயே இந்த பிரச்சனை வந்தது. மேலும் பையனை கைது செய்யும் அளவுக்கு வரும் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.

சாருக்கான் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று என்னுடைய மகன் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் இருக்கலாம் எந்தவித சந்தோஷத்தையும் அனுபவிக்கலாம் என கூறியதை தற்போது ரசிகர்கள் எடுத்து வைரலாகி ஒரு தந்தை பேசும் பேச்சா இது என அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Shah-Rukh-Khan-son-cinemapettai
Shah-Rukh-Khan-son-cinemapettai

இதெல்லாம் ஒருபுறமிருக்க எப்படியாவது என்னுடைய அப்பா தன்னை வெளியில் சீக்கிரம் எடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் தரும் சாப்பாட்டை தொடுவதே இல்லையாம்.

அதற்கு பதிலாக வெறும் பிஸ்கட் மற்றும் தண்ணீரை வைத்துக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பாலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. ஷாருக்கானும் ஒரு நாளைக்கு 10 முதல் 20 லட்சம் கொடுத்து பெரிய வக்கீல்களை வைத்தும் பையனை வெளியில் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஆறுதலாக இருந்து வருகின்றனர். இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே பாலிவுட் வட்டாரத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் சர்ச்சைகள் அதிகமாகவே இருந்து வருகின்றது. முன்னதாக தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் கூட போதைப்பொருள் பயன்படுத்தியதாக சில நடிகர் நடிகைகள் விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பதும் கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்