அந்தரங்க உடையில் ஆட்டம் போட்ட நடிகை.. அட்லி கூட சேர்ந்த நேரமோ என்னவோ சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

சமீபகாலமாக பாலிவுட்டில் டாப் நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் பாய்காட் செய்து விடுகிறார்கள். இதற்குக் காரணம் பாலிவுட்டில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும், இவர்களால் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சுஷாந்த் சிங் மரணத்திற்கும் இதுதான் காரணம் என பலரும் கூறி வந்தனர். இதனால் ஹிந்தியில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது கடுமையான எதிர்ப்பு வழுத்து வருகிறது. இந்நிலையில் ஷாருக்கானின் படங்கள் சில ஆண்டுகளாக வெளிவராத நிலையில் இப்போது ஜவான் மற்றும் பதான் படங்களில் நடித்துள்ளார்.

Also Read : பாலிவுட்டிலும் பெயரை கெடுத்து கொள்ளும் அட்லி.. முன்கூட்டியே விழித்துக் கொண்ட ஷாருக்கான்

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. அதேபோல் பதான் படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது பதான் படத்திற்கு ரசிகர்கள் பாய்காட் செய்து வருகிறார்கள்.

இதற்குக் காரணம் தீபிகா படுகோன் தான். ஏனென்றால் அண்மையில் பதான் படத்தின் பாடல் ஒன்று வெளியாகியிருந்தது. இதில் தீபிகா படுமோசமான அந்தரங்க உடையில் ஆட்டம் போட்டிருந்தார். சமீபகாலமாக அதிக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த தீபிகா படுகோன் திடீரென இவ்வளவு கிளாமர் காட்டியுள்ளார்.

Also Read : ட்லீ மீது மன வருத்தத்தில் இருக்கும் ஷாருக்கான்.. காண்டாகி கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்

மேலும் தீபிகா படுகோன் இதில் காவி நிற பிகினி உடை அணிந்திருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தீபிகாவின் அதீத கவர்ச்சியால் பாலிவுட்டில் இந்த பாய்காட் செய்து வருகிறார்கள். ஷாருக்கான் இப்போது தான் பல பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அதற்குள் அவரது படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அட்லியுடன் சேர்ந்த நேரமோ என்னமோ முதலில் ஷாருக்கானின் மகன் போலீஸ் கேஸ் வரை சென்றார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து. இப்போதுதான் இந்தப் பிரச்சினையை ரசிகர்கள் மறந்த நிலையில் அடுத்த பிரச்சனை உருவாகியுள்ளது.

Also Read : ஷாருக்கான் கூட நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. ஆடிப்போன அட்லி

Advertisement Amazon Prime Banner