25 படத்திற்கு மேல் நடித்தும் அங்கீகாரம் கிடைக்காத ஷாம்.. அதுவும் இந்த ஒரு படம் ரொம்ப ஸ்பெஷல்!

குஷி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாம். அதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு சில நடிகர்களுக்கு நண்பராகவும் படங்களில் நடித்துள்ளார்.

ஷாம் நடிப்பில் துரை இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான படம்தான் ஆறு மெழுகுவர்த்தி. ஷாமுக்கு ஜோடியாக பூனம் கவுர் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தது மட்டுமில்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

2020ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம் நாங்க ரொம்ப பிஸி. இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறலாம்.

ஆனால் சமூக வலைதளத்தில் இவரைப் பற்றிய செய்தி ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால் ஷாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் படத்திற்காக 10 நாட்கள் தூங்காமல் இருந்து நடித்துக் கொடுத்துள்ளார்.

shaam
shaam

அந்த 10 நாட்கள் தூங்காமல் இருந்ததால் அவர் கண்கள் எல்லாம் வீங்கி மிகவும் சோர்வுற்ற நிலையில் நடித்த காட்சிகள் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இந்த படத்திற்காக இவர் உழைத்த கடின உழைப்பு பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் இந்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

25 படங்களுக்கு மேல் நடித்தும் சினிமாவில் தற்போது வரை முன்னணி நடிகனாக வர முடியவில்லை. கடைசியாக காவியன், நாங்க ரொம்ப பிஸி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்