படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடிய சீரியல் கதாநாயகி..

வெள்ளித்திரை போன்றே சின்னத்திரையை காண்பதற்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணானே கண்ணே சீரியலில் கதாநாயகியாக மீரா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நிமிஷா.

இவரை காண்பதற்கு என்றே இளைஞர்களும் இந்த சீரியலை அனு தினமும் தவறாமல் பார்க்கின்றனர். மேலும் இந்த சீரியலில் நிமிஷா, அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மகளாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இன்னிலையில் நிமிஷாவின் அப்பாவாக கௌதம் கதாபாத்திரத்தில் நடிகர் பப்லு நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பப்லு நடிகையின் நிமிஷாவை,

பயமுறுத்தும் வகையில் படுத்துக்கொண்டு பாம்பு போல் ஊர்ந்து வந்து அவருடைய காலை சீண்டியதும், நிமிஷா அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளார். இந்த வீடியோவை பப்லு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

serial-actress-nimisha-cinemapettai
serial-actress-nimisha-cinemapettai

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் இந்த வீடியோவை பார்த்த சீரியல் ரசிகர்கள், ‘இது பெரிய மனசு செய்ற வேலையா இது?’ என பப்லுவை நக்கல் அடிக்கின்றனர். சீரியல் கதாநாயகி

நடிகர் பப்லு நடிப்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸரும் கூட, இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்