துபாய் தொழிலதிபரை மயக்கி போட்ட பிரபல சீரியல் நடிகை.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த நாயகி

தமிழ்நாட்டு இல்லத்தரசிகள் சீரியலில் அதிக மோகம் பிடித்தவர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். தமிழ் சீரியல் மட்டுமில்லாமல் மற்ற மொழி சீரியல்களை டப் செய்து போட்டாலும் அதை விடிய விடிய பார்க்கவும் தயங்க மாட்டார்கள்.

அப்படி ஹிந்தியிலிருந்து டப் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல்தான் நாகினி. இந்த சீரியலில் கவர்ச்சிகாட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மௌனி ராய்.

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டடித்த இந்த நாகினி சீரியல் தமிழிலும் அதே பெயரில் டப் செய்யப்பட்டு இங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அந்த நடிகைக்கும் மவுசு கூடி சமீபகாலமாக பாலிவுட் சினிமாவில் ஒரு குறிப்பிடப்படும் நாயகியாக வலம் வருகிறார்.

mouniroy-cinemapettai
mouniroy-cinemapettai

பெரிய அளவு படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கவர்ச்சி காட்டி ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார். மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் நம்பியார் என்பவரை காதலித்து விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.

சமீபத்தில் துபாய் சென்ற மௌனி ராய் கொராணா பிரச்சனையில் சிக்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் இந்தியாவுக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். இதனால் ஒரே ஹோட்டல் அறையில் வெறும் இரண்டு செட் துணி மணிகளை மட்டுமே வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டாராம்.

அந்த நேரத்தில் மௌனி ராய்க்கு உதவி செய்த சுரேஷ் நம்பியாரின் மீது மௌனி ராய்க்கு அபிப்ராயம் ஏற்பட்ட பின்னர் அது காதலாக மாறி தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்