கவலையில் இருக்கும் செல்வராகவன்.. கடுப்பில் இருக்கும் தனுஷ்

தமிழ் சினிமாவில் காதலை வித்தியாசமாக காட்டுபவர் இயக்குனர் செல்வராகவன்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

செல்வராகவன் இயக்கும் பெரும்பாலான படங்களில் அவர் தம்பி தனுஷ் கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த வகையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ளார்கள். நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். அரவிந்த் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.

திடீரென இப்படத்தில் இருந்து அரவிந்த் கிருஷ்ணன் விலகிவிட்டார். இந்நிலையில் அருண் மகேஷ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படம் சாணிக்காயிதம். இப்படத்தில் யாமினி ஒளிப்பதிவு செய்தார்.

இதைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன் நானே வருவேன் படத்திலும் யாமினியை ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில் யாமினியும் இப்படத்தில் இருந்து விலகினார். நானே வருவேன் படத்தில் அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் விலகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் படத்தில் ஒளிப்பதிவாளர்கள் தொடர்ந்து ஏன் விலகுகிறார்கள் என்று கோடம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் இதைப் பற்றித்தான் பேச்சு. இந்நிலையில் யாழினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் செல்வராகவனுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இப்படத்தில் இருந்து விலகுகிறேன். படக்குழுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் மும்மரமாக நடந்த படப்பிடிப்பில் தொடர்ந்து இரண்டு ஒளிப்பதிவாளர்கள் விலகியதால் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இதனால் தற்போது தனுஷ் கடுப்பில் இருப்பதாகவும் செல்வராகவனிடம் தற்போது தனது ஏகப்பட்ட படங்கள் உள்ளன தொடர்ந்து இந்த மாதிரியான தவறு நடந்தால் எப்படித்தான் நான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

இதனால் தற்போது செல்வராகவனும் கவலையில் இருப்பதாக கூறி வருகின்றனர். மீண்டும் புதிய ஒளிப்பதிவாளர் உடன் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்