சத்தமே இல்லாமல் செல்வராகவன் செஞ்ச வேலை.. புதுப்பேட்டை 2-க்கு முன் சர்ப்ரைஸ் கொடுக்க போகும் கண்ணாடி அண்ணாச்சி

Director Selvaraghavan: செல்வராகவனுக்கு கடந்த சில வருடங்களாக எதுவுமே சரி இல்லை என்று சொல்லலாம். அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்த அவர் சரி நடிகராக வெற்றி பெறலாம் என்று பார்த்தார். ஆனால் அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இருப்பினும் அவர் தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில் இவருடைய புதுப்பேட்டை படத்தின் அடுத்த பாகம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும் சத்தம் இல்லாமல் நடந்துவரும் நிலையில் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்கிறது திரையுலக வட்டாரம். ஆனால் அதற்கு முன்பாகவே செல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறாராம்.

Also read: செல்வராகவன் இயக்கத்தில் சோடைப்போன ஐந்து பட சம்பாத்தியத்தையும் தொலைத்த பகாசுரன் பீமராசு

அதாவது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. ரவி கிருஷ்ணா நடிப்பில் 70 சதவீத படப்பிடிப்பை செல்வராகவன் முடித்து விட்டாராம். ஆனால் தற்போது தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கொஞ்சம் பொருளாதார சிக்கலில் இருக்கிறார்.

அதனால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகி இருக்கும் நிலையில் மார்ச் இறுதிக்குள் அதை முடித்து விட செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை 2 சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தை வெளியிடவும் அவர் முடிவு செய்து இருக்கிறார்.

எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருக்கும் கண்ணாடி அண்ணாச்சி சரசரவென இப்பட ஷூட்டிங்கை ஊதி தள்ளி இருக்கிறார். இதன் மூலம் செல்வராகவன் பறி போன தன்னுடைய இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: செல்வராகவனுக்கு பிரச்சனையில் இருக்கும் 4 இரண்டாம் பாக படங்கள்.. இந்த ஆண்டு கன்ஃபார்ம் ஆன புதுப்பேட்டை 2