செல்வராகவன் படத்தில் இவருக்கு வாய்ப்பு? இப்படி நடக்க வாய்ப்பில்லையே!

என்னதான் ஜீனியஸ் இயக்குனர் என பெயரெடுத்து இருந்தாலும் வசூல் ரீதியாக சமீபகாலமாக ஒரு வெற்றியை கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். கடைசியாக அவர் இயக்கிய என்ஜிகே படமும் வசூலில் படுதோல்வியை சந்தித்தது.

அதன்பிறகு நடிகராக மாறி விட்ட செல்வராகவன் சாணி காயிதம், விஜயின் பீஸ்ட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகராக மாறி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்து இந்த நேரத்தில் மீண்டும் இயக்குனராக தனது தம்பி தனுசுடன் களமிறங்கியுள்ளார்.

நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்புகள் இடைவேளை இல்லாமல் ஒரே ஷெட்யூலில் மொத்த படமும் படமாக்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தை தமிழ் சினிமாவின் டாப் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார்.

பெரும்பாலும் செல்வராகவன் படங்களில் காமெடி நடிகர் என்று தனி ஒருவராக யாரையும் பார்த்திருக்க முடியாது. கதையில் வருபவர்களை நகைச்சுவை செய்வார்கள். ஆனா நானே வருவேன் படத்தில் அப்படி இல்லை.

முதல்முறையாக முழுநேர காமெடியன் யோகி பாபு உடன் சேர்ந்து களமிறங்க உள்ளார் செல்வராகவன். இதற்கு தனுஷ் தான் சப்போர்ட் செய்ததாகவும் தெரிகிறது. இந்த காமெடி கூட்டணி எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

yogi babu in pei mama trailer
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்