ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நடிப்பு எல்லாம் சைடு தான்.. பட்டையை கிளப்பிய பழைய புதுப்பேட்டை செல்வராகவன்

செல்வராகவன் படங்கள் இயக்குவதை சிறிது காலம் நிறுத்திவிட்டு நடிப்பு பக்கம் வந்துவிட்டார். சமீபத்தில் அவர் பீஸ்ட் ,சாணிக் காயிதம் போன்ற படங்களில் நடித்து எனக்கு நடிக்கவும் தெரியும் என்று காண்பித்துவிட்டார்.

செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை படம் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

செல்வராகவன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார் இனிமேல் இயக்கத்தை நிறுத்தி விடுவார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது ஆனால் செல்வராகவன் நீண்ட காலமாகவே தனுஷை வைத்து “நானே வருவேன்” என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது இந்த “நானே வருவேன்” படமும் முடிந்து விட்டது. இதன் ரிலீஸுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தை செல்வராகவன் முக்கியமான நபர்களிடம் போட்டு காட்டியுள்ளார். படத்தைப் பார்த்தவர்கள் மிரண்டு விட்டனராம். இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் படம் என்று பார்த்தவுடனே சொல்லிவிட்டார்களாம்.

இந்த படம் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான மயக்கமென்ன படத்தின் சாயலில் இருக்குமாம் ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கலந்த திரைப்படம். தனுஷ் படத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதனால் நிச்சயம் இந்தப்படம் வெற்றி தான் என்று செல்வராகவன் கூறி வருகிறாராம்.

நடிப்பின் கவனம் செலுத்திய செல்வராகவன் இப்பொழுது மீண்டும் படத்தை இயக்கியதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவருடைய ரசிகர்களும், தனுஷின் வெறியர்களும் இந்தப் படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News