முரட்டுத்தனமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன்.!

ஒரு இயக்குனராக காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளை தமிழ் சினிமாவில் வழங்கியவர் இயக்குனர் செல்வராகவன். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் இவரது படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்புகள் இருக்கும்.

இவரது படங்கள் மாறுபட்ட கதை களங்களை கொண்டிருக்கும். அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் தாமதமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. செல்வராகவன் இறுதியாக சூர்யாவின் என்ஜிகே படத்தை இயக்கியிருந்தார்.

இவ்வளவு காலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக முத்திரை பதித்த செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

selvaraghavan
selvaraghavan

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாணிக் காயிதம் படத்தில் மிரட்டல் லுக்கில் இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்தை இயக்கவுள்ளார்.

- Advertisement -