தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தை அன்றே கணித்த செல்வராகவன்.. அவர் போட்ட ட்வீட் இப்ப வைரல்

ஐஸ்வர்யாவுடன் தனது திருமண வாழ்வை முறித்து கொள்வதாக தனுஷ் எப்போது அறிவித்தாரோ அன்றிலிருந்து அவர்களின் பிரிவு குறித்து பலவிதமான ஊகங்கள் மீடியாவில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தற்போது தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் எப்போதோ போட்ட ஒரு ட்வீட் வைரலாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்கையை அவர்கள் திடீரென முடித்துக் கொள்வதாக கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் அவர்களின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று பிரபலங்கள் உட்பட பலரும் அவர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் செல்வராகவன் கடந்த மாதம் ஷேர் செய்த போஸ்ட் ஒன்று தனுஷின் தற்போதைய நிலைக்கு ஒத்துப்போகும் படி இருக்கிறது.

அதில் அவர் கூறியிருப்பதாவது தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒன்றும் பிரச்சினை இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த சில மாதங்களாகத் தான் கருத்து வேறுபாடு இருந்தது என்று தகவல்கள் வெளியாகியது. அப்படி இருக்கும்போது அவர்களின் குடும்ப பிரச்சனை அதிகமாக இருக்கும் சமயத்தில் தான் செல்வராகவன் இப்படி ஒரு ட்வீட்டை போட்டு உள்ளார்.

selvaraghavan-twit
selvaraghavan-twit

அப்பொழுது இதற்கு அர்த்தம் புரியாத பலருக்கும் தற்போது நன்றாகவே புரிகிறது. மேலும் யாருடைய சமரசங்களையும் ஏற்க முடியாத பட்சத்தில் தான் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளார்கள். இருப்பினும் அவர்கள் இருவரும் நிதர்சனத்தை புரிந்து கொண்டு விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்