ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தவர்.. இப்போது செல்வராகவன் பட ஹீரோ.. மாஸ்!

தமிழ் சினிமாவில் சாதித்த பல நடிகர்களும் தங்களுடைய ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தான் உயர்ந்துள்ளனர். ஈசியாக சினிமாவில் நுழைந்து சாதித்தவர்கள் குறைவுதான். அப்படி ஒரு நடிகரைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

தமிழ் சினிமாவில் காட்சிக்கு காட்சி சுவாரசியத்தை கூட்டி படம் பார்ப்பவர்களுக்கு கிளைமேக்ஸ் எப்படி இருக்கப்போகிறது என்பதை காட்டாமல் சஸ்பென்சாக கொண்டு செல்வார்கள். ஆனால் மாஸ் படங்களுக்கு க்ளைமாக்ஸ் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். எப்படியும் ஒரு ஹீரோ கடைசியில் வில்லனை கொன்று விடுவார்.

காலம் காலமாக அது தான் மாஸ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிக்காக இருந்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்தவர் தான் எஸ் ஜே சூர்யா. அஜித்துக்கு வாலி என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த எஸ் ஜே சூர்யா, விஜய்யுடன் குஷி என்ற படத்தில் கூட்டு சேர்ந்தார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வித்தியாசமான முறை ஒன்றை கையாண்டிருந்தார்.

sj-suriya-cinemapettai
sj-suriya-cinemapettai

படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் கிளைமாக்ஸில் தான் எனவும், இவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை பார்ப்போம் என ஓப்பனாக சொல்லிவிட்டுத்தான் படத்தையே தொடங்குவார். குஷி படம் மாபெரும் வெற்றி பெற்று மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஹீரோவாக மாறி தன்னுடைய மார்க்கெட்டை இழந்தாலும் மீண்டும் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. சமீபத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் எந்த ஒரு குறையும் வைக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்த எஸ் ஜே சூர்யா தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தாராம். பத்தாவது படிக்கும்போதே சினிமாவுக்காக வீட்டை விட்டு ஓடிவந்து மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். எஸ் ஜே சூர்யா நடித்த கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தது எது? என்பதை கமெண்டுகளில் பதிவு செய்யலாம்.

- Advertisement -