ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் செல்வராகவன்.. எல்லாம் அழுவ ரெடியா இருங்க

இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய மாறுபட்ட கதைக்களத்தினால் கோலிவுட்டில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்தவர். இவருடைய படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதுமே ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டின் தனித்துவமான இயக்குனராக செல்வராகவன் திகழ்ந்து வருகிறார்.

தன்னுடைய முதல் படமான துள்ளுவதோ இளமை மூலம் மொத்த இளைஞர்களையும் கவர்ந்துவிட்டார். ரசிகர்களின் பல்ஸ் பிடித்து படம் எடுப்பதோடு, ரொம்பவும் எதார்த்தமான கதைகளையும் எடுக்க கூடியவர். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஒன்றுக்கொன்று எந்த சாயலும் இல்லாத அளவுக்கு இவர் படங்களை இயக்கியிருக்கிறார்.

Also Read: மனைவியால் நொந்துபோனரா செல்வராகவன்? சர்ச்சைக்குள்ளான பதிவிற்கு இதுதான் காரணம்.!

அதே நேரத்தில் செல்வராகவன் இயக்கத்தில் அழகிய காதல் கதைகளும் உண்டு. இவருடைய காதலில் உருகாத ரசிகர்களே இல்லை. காதல் கொண்டேன், இரண்டாம் உலகம், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் இவர் சொல்லிய காதல்கள் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு காதல் காவியத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வாய்ப்பு தான் செல்வராகவனுக்கு மீண்டும் கிடைக்க இருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் தமிழ் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் 7 ஜி பிரிந்தாவன் காலனி என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

Also Read: முழு சைக்கோவாக மாறிய செல்வராகவன்.. பல உண்மை சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பகாசூரன் ட்ரெய்லர்

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. ஒரு எதார்த்தமான காதல் கதை மற்றும் அதோடு சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என படத்தின் முதல் பாகத்தின் தாக்கமே இன்றளவும் இருக்கும் நிலையில், இரண்டாம் பாகம் வெளிவந்தால் ரசிகர்கள் கண்ணீரில் குறைவதோடு, படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

Also Read: ஒரே படத்தால் 12 வருட கடனில் தவித்த செல்வராகவன்.. 2ம் பாகம் எடுக்காததன் காரணம் இதுதான்

- Advertisement -