ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

முன்றே நாள் வசூலில் பட்டையை கிளப்பும் சீதாராமம்.. 100 கோடி கலெக்சனில் துல்கர் சல்மானா.?

ஹனு ராகவாப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருனாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதாராமம். இப்படத்தை விஜய் ஆண்டனி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக அமைந்திருந்தது.

சீதாராமம் படம் தேசப்பற்று மற்றும் காதலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் காலத்தால் அழியாத டைட்டானிக் படம் போல் இல்லை என்றாலும் பல இடங்களில் ரசிக்க செய்தது. மேலும் துல்கர் சல்மான், மிருனாள், ராஷ்மிகா ஆகியோரின் நட்பு படத்திற்கு பலமாக அமைந்தது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் சீதாராமம் படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதை முன்பே படக்குழு அறிவித்தது.

அதேபோல் படம் வெளியாகி ஏகபோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. சீதாராமம் படம் வெளியாகும் போது சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த அளவுக்கு திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சீதாராமன் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் 25 கோடி வசூல் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் இன்னும் சில நாட்களில் 100 கோடி வசூல் செய்யும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துல்கர் சல்மானின் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை சீதாராமம் படம் படைக்க உள்ளது. இதனால் தற்போது துல்கர் சல்மான் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

- Advertisement -

Trending News