பொம்பள சோக்குனு பகிரங்கமாக பிஸ்மி வச்ச குற்றச்சாட்டு.. சீனு ராமசாமி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

Seenu Ramasamy : இயக்குனர் சீனு ராமசாமியை பற்றி பகிரங்கமாக சமீபத்தில் பிஸ்மி ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார். விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் தான் சீனு ராமசாமி. தொடர்ந்து இவர்களது கூட்டணியில் படம் வெளியாகி ஹிட்டான நிலையில் இடம் பொருள் ஏவல் படம் மட்டும் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை தாமதமாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி சீனு ராமசாமியை பற்றி பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதாவது இடம் பொருள் ஏவல் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிகை மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யபட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் வந்த போது இயக்குனர் எல்லை மீறியதால் நடிகை விலகியதாக பிஸ்மி அதிர்ச்சியான தகவலை கூறியிருந்தார்.

பொது வழியில் இயக்குனர் சீனு ராமசாமியை பற்றி பிஸ்மி இவ்வாறு கூறியது சர்ச்சையாக வெடித்தது. இந்த இடத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் சீனு ராமசாமி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதாவது மனிஷா யாதவ் முதல் நாள் படப்பிடிப்பில் முதல் சாட்டிலேயே கிட்டத்தட்ட 28 டேக்குகள் வாங்கினாராம்.

Also Read : மகனின் போஸ்டர் வெளியீட்டில் கூட கலந்து கொள்ளாத விஜய் சேதுபதி.. உண்மையை மறைக்க முடியுமா.?

இயக்குனர் சீனு ராமசாமியின் பதிவு

அதோடு மட்டுமல்லாமல் நடிகைக்கு உதவ வந்த வடிவுக்கரசி இடமும் கடிந்து கொண்டாராம். மேலும் என்னுடைய சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக ஏன் பெற்றார். நவீன லட்சுமி காந்தன் பிஸ்மி அண்ணன் தனக்கு மலர் அஞ்சலி வைக்க பார்க்கிறார், இதை சற்றும் தான் எதிர்பார்க்க வில்லை என்ற கூறியிருக்கிறார்.

ஆண்களை படத்தில் இருந்து வெளியேற்றினால் சிறந்த இயக்குனர் அதுவே பெண்களை நீக்கினால் அவர் மீது மோசமானவர் என்று முத்திரை குத்தப்படுத்துவதாக தனது ஆதங்கத்தை சீனு ராமசாமி வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய பதிவு தான் இப்போது பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

சீனு ராமசாமியின் பதிவு

Seenu-ramasamy
Seenu-ramasamy

Also Read : ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் வாரிசு.. பூஜையுடன் மிரட்டும் டைட்டில் போஸ்டர்