திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

தனுஷ்க்கு மட்டும் தான் நோ.. விஜய் சேதுபதி படம்னா டபுள் ஓகே சொல்லும் பாலிவுட் வாரிசு நடிகை

பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் தனுஷின் படத்தை நிராகரித்து விட்டு விஜய் சேதுபதியின் படத்தில் நடிப்பதற்காக அவருக்கே போன் செய்து வாய்ப்பு கேட்டிருக்கிறார் பிரபல பாலிவுட் வாரிசு நடிகை.

மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் அளித்த பேட்டியில் தென்னிந்திய திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க மிக ஆர்வமுடன் இருப்பதாகவும் அதற்கான வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வதாகவும் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

Also Read: டாப் ஹீரோக்கள் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்த 6 படங்கள்.. நானே வருவேன் படத்தில் மிரட்டிய தனுஷ்

அத்துடன் ஜான்வி கபூர், விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்பட்டு அவருக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். விஜய் சேதுபதியை தொலைபேசியில் அழைத்த ஜான்வி கபூர் நானும் ரவுடிதான் படத்தை 100 முறைக்கு மேல்பார்த்ததாகவும் அதிலிருந்து உங்களின் ரசிகையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் நான் கண்டிப்பாக ஆடிஷனில் கலந்து கொள்வேன். நான் உங்களுடன் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார். இதைக் கேட்ட விஜய் சேதுபதி ஆச்சிரியத்தில் ‘அய்யோ’ என பதிலளித்துள்ளார்.

Also Read: ஸ்கூல் பையனாக நடித்து அசத்திய 5 ஹீரோக்கள்.. தொட்டிலில் போட்டா கூட செட்டாகும் தனுஷ்

மேலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது நல்ல படத்தில் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் டாப் நடிகருடன் நடிக்க ஆசைப்பட்ட ஜான்வி கபூர் இப்பொழுது இந்த வாய்ப்பை விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் தனுஷ் இயக்குவதாக இருந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக நடிக்க தனுஷ் நடிகை ஜான்வி கபூரை அணுகியதாகவும், அதற்கு ஜான்வி மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியாக வலம் வரும் ஜான்வி கபூர் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் தனுசுக்கு நோ சொல்லிவிட்டு, விஜய் சேதுபதி படத்தில் நடிப்பதற்கு மட்டும் வழியன போய் வாய்ப்பு கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Also Read: வர வர செட்டே ஆகாத ஹீரோயிஸம்.. தொடர் நடிப்பால் விஜய் சேதுபதிக்கு வந்த வினை

- Advertisement -

Trending News