கமலுக்கு அடுத்தபடியாக கெட்டப்பில் அசத்திய நடிகர்.. அத்தனையும் வேற லெவல் கெட்டப்

kamal haasan
kamal haasan

தமிழ் சினிமாவில் வித்தியாசங்கள் காட்டுவதில் கமலஹாசனை அடிச்சிக்க ஆளே இல்லை. நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்திருப்பார். அதன் பின் தமிழ் சினிமாவில் அத்தகைய முயற்சியை நீண்டகாலமாக யாரும் எடுக்கவில்லை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக நிறைய மாறுதல்களை காட்டி நடிக்கும் நடிகர் என்றால் அது உலகநாயகன் கமலஹாசன். மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நான்கு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் கமல்.

ஒவ்வொரு படத்திலும் தன் தோற்றத்தில் மாறுதலை காட்டும் கமல், தமிழ் சினிமாவை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றவர் என்று கூறலாம். தோற்றத்தில் மற்றும் அல்லாது தான் அணிந்திருக்கும் ஆடையிலும் பல வித்தியாசங்களை காட்டி நடித்தவர் கமலஹாசன்.

கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிக வேடங்களை போட்டது புரட்சித் தமிழன் சத்தியராஜ். அவரும் தன் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க கூடியவர்.

100 வது நாள் மொட்டை சத்யராஜ் முதல் கட்டப்பா கதாபாத்திரம் வரை இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. அந்த அளவிற்கு தன் தோற்றத்தில் வித்தியாசம் காட்டக்கூடியவர். இதில் அமைதிப்படை, அரசியல்வாதி கெட்டப் இன்றுவரை யாராலும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம்.

கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்த சத்யராஜ், கமலுக்கு அடுத்தபடியாக தோற்ற மாறுதல்களை ஏற்று நடித்தவர். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட வித்தியாசமான வேடங்களை போட்டுள்ளார்.

Advertisement Amazon Prime Banner