ஜோடியாக சென்று தங்க நகை வாங்கிய யூடியூப் பிரபல சதீஷ் மற்றும் தீபா.. வைரல் வீடியோ

ஜோடியாக சென்று தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர் யூட்யூப் பிரபலங்களான சதீஷ் மற்றும் தீபா. யூட்யூபில் ஒன்றாக சேர்ந்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் தான் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து சென்னையில் தங்கம் மற்றும் வைரத்திற்கென மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் தங்களது இரண்டு பெண் குழந்தைகளுக்காக தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர். இவர்கள் ஷாப்பிங் செய்த ஷோ ரூம் தாம்பரத்தில் உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிக பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. சாமானிய மக்களும் வைரம் வாங்கும் அளவிற்கு நியாயமான விலையில் குறிப்பாக 3 ஆயிரம் ரூபாயில் இருந்தே வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ஏற்கனவே இந்த ஷோ ரூமில் வனிதா விஜயகுமார், ஷாமிலி சுகுமார், மணிமேகலை, விஜய் டிவி சரத், வினோத், தீபா, ஆகியோர் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.