ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் வார இறுதியில் நிகழ்ச்சியின் டிஆர்பியை உயர்த்திக் கொண்டிருக்கும் கமலின் பேச்சைக் கேட்கவே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதனாலேயே தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் தற்போதைய சீசனின் போட்டியாளராக இருந்த ஜி பி முத்துவுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுத்தனர். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களில் ஜிபி முத்து அங்கு இருக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். வெகுளியான அவருடைய நடவடிக்கைகளை பார்த்து நிச்சயம் இவர் இறுதி போட்டி வரை செல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

Also read: பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து

ஆனால் அனைவரையும் ஏமாற்றும் வகையில் ஜிபி முத்து வீட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் வருத்தமாக இருந்தாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்து கூறி வந்தனர். தற்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு நடித்துவரும் ஜி பி முத்து நடிகரும், இயக்குனருமான சசிகுமாரிடம் வீடியோ கால் மூலம் பேசி இருக்கிறார்.

காரி திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் சசிகுமார் ஒரு பேட்டியில் ஜிபி முத்துவுடன் உரையாடி இருக்கிறார். அதில் பல விஷயங்களைப் பற்றியும் பேசிய சசிகுமார் ஜிபி முத்துவுக்கு வெளிப்படையாக ஒரு கோரிக்கையும் வைத்திருக்கிறார். அதாவது ஜி பி முத்துவின் அடையாளமே லெட்டர் தான்.

Also read: ஜிபி முத்துக்கு பிடித்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.. இவர பிடிக்காத ஆளே இல்ல

இவரை கண்டபடி திட்டி வரும் லெட்டர்களை தன்னுடைய சேனலில் நேரடியாக ஜிபி முத்து வெட்ட வெளிச்சமாக்குவார். இதுதான் அவருக்கான ரசிகர்கள் கூட்டத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தியது. அதை குறிப்பிட்டு பேசிய சசிகுமார் நெகட்டிவான விஷயங்களை உங்கள் வீடியோவில் பகிர வேண்டாம். இப்பொழுது மக்களுக்கு உங்களை நன்றாக அடையாளம் தெரிகிறது.

அப்படி இருக்கும்போது அவர்களுக்கு நல்ல விஷயங்களை கூற வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அதனால் இனி உங்கள் வீடியோவில் அனைவருக்கும் உபயோகமுள்ள பாசிட்டிவான விஷயங்களை பற்றி பேசுங்கள் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு இது ஒரு முக்கியமான கடமை என்றும் கூறினார். இதை ஜிபி முத்துவும் ஏற்றுக் கொண்டார். தற்போது சசிகுமார் பேசிய அந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Also read: அசத்தல் கம்பேக் கொடுத்த சசிகுமார்.. காரி படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

- Advertisement -