பாரதிராஜா, பாலாவை ஓரங்கட்டி களமிறங்கிய சசிகுமார்.. 12 வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக ரீ என்ட்ரி

ஒரு இயக்குனராக அனைவரின் கவனத்தையும் பெற்ற சசிகுமார் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது குற்றப்பரம்பரை வெப் தொடரின் மூலம் மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை.

இந்த கதையை திரைப்படமாக எடுப்பதற்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலா இருவரும் நிறைய முயற்சி செய்தனர். ஆனால் இந்த படம் இயக்குவதில் அவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. அதன் பிறகு பாரதிராஜா இந்த படத்தை இயக்குவதாக இருந்தார்.

அதுவும் சில காரணங்களால் நடைபெறாமல் போனது. தற்போது சசிகுமார் இந்த கதையை வெப் தொடராக எடுக்க இருக்கிறார். இந்த வெப்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வர இருக்கிறது. இதற்காக சசிகுமாருக்கு மூன்று மடங்கு அதிகமான சம்பளத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் கொடுத்துள்ளதாம்.

இந்த நாவலை எழுதிய வேல ராமமூர்த்தி தான் இந்த வெப் தொடருக்கான திரைக்கதையையும் எழுத இருக்கிறார். அந்த வகையில் சசிகுமார் 12 வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான கதையின் மூலம் அசத்தல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

மேலும் இந்த கதையில் பிரபல நடிகரின் மகன் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இந்த தொடருக்கு இப்போதே மிகப்பெரிய ஆவல் எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. பாரதிராஜா மற்றும் பாலாவால் சாதிக்க முடியாத ஒரு கதை இப்போது சசிகுமாரின் கையில் வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

- Advertisement -