வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜயகாந்தின் வாரிசுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. 13 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்

இயக்குனராக சினிமா பயணத்தை தொடங்கியவர் சசிகுமார். இவர் இயக்கிய முதல் படம் சுப்பிரமணியபுரம். இதில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பிறகு 2010 ஆம் ஆண்டு ஈசன் என்ற படத்தை இயக்கி அதில் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். பின்னர் நடிப்பதில் பிஸியாக மாறிவிட்டார். இப்படி இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், உடன்பிறப்பே, காரி, அயோத்தி போன்ற படங்களில் மூலம் நடிகராக மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். இதனாலையே இவர் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அத்துடன் இந்த வருடம் ரிலீஸ் ஆவதற்கு பகைவனுக்கு அருள்வாய், நா நா, நந்தன் போன்ற படங்களை வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

Also read: முதல் பாகம் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம் குப்பையாக மாறிய 6 படங்கள்.. ஒரே பாணியில் வெளியாகி சலிப்பைத் தட்டிய சாட்டை 2

தொடர்ந்து இவர் நடிப்பதால் இனிமேல் படங்களை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்ற எதிர்பார்த்த நிலையில் தற்போது மறுபடியும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் நாற்காலிக்கு திரும்புவதற்கு முடிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிட இருக்கிறார்.

இப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இவரும் நடிக்க இருக்கிறார். கடந்த வருடம் இவரும் சசிகுமாரும் இந்த படத்திற்கான கதைகளை பற்றி ஆலோசித்து பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.

Also read: என்னதான் படம் நல்லா இருந்தாலும் மார்க்கெட்ல விலை போகல.. மனக்கசப்பால் சறுக்கி விழுந்த சசிகுமார்.!

மேலும் இவர்கள் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படம் கிராமப்புற பொழுதுபோக்கு படமாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். அத்துடன் இப்படத்தில் முதன் முதலாக விஜயகாந்த் மகன் நடிக்க இருப்பதால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் விஜயகாந்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இவர் எப்பொழுது மீண்டும் நடிப்பார் என்று ஏங்கி கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவரது மகன் நடிக்க இருப்பதால் அந்த இடத்தை இவர் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்படத்திற்கான கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி அடுத்த வருடம் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Also read: டேமேஜ் ஆன பேரை காப்பாற்றி கொள்ள விஷால் போடும் திட்டம்.. சப்போர்டுக்காக விஜயகாந்தை வைத்து போடும் பிளான்

- Advertisement -

Trending News