வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கழுத்தை நெறிக்கும் கடன்.. அதல பாதாளத்தில் தவிக்கும் சசிகுமார்

ஒரு இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்த சசிகுமார் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். அது அவருக்கு நன்றாக கை கொடுக்கவே நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயரையும் எடுத்தார்.

அது மட்டுமல்லாமல் பசங்க திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் இவர் ஒரு சில பாடல்களையும் பாடியிருக்கிறார். இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த அவருடைய சினிமா வாழ்வு திடீரென பல சிக்கல்களையும், தோல்விகளையும் சந்தித்தது.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவி வருகிறது. இது தவிர சசிகுமார் தற்போது ஏகப்பட்ட கடன் நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறாராம். தாரை தப்பட்டை, கிடாரி, பலே வெள்ளையத் தேவா போன்ற திரைப்படங்களை தயாரித்த சசிகுமாருக்கு அதன் மூலம் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் கடன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது அடைக்க முடியாத சூழ்நிலையில் அவர் மாட்டிக் கொண்டிருக்கிறாராம். எங்கு திரும்பினாலும் இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை அவரை சுற்றிக் கொண்டே வருவதால் அவர் தற்போது நடிப்பதை விட்டு விடலாமா என்ற யோசனையிலும் இருக்கிறாராம்.

திரையுலகை பொருத்தவரை இப்போது மாஸ் ஹீரோக்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அதனால் வளர்ந்து வரும் சிறு சிறு ஹீரோக்களின் திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுவதில்லை. இதனால் சசிகுமார் மீண்டும் டைரக்ஷன் பக்கம் செல்லும் முடிவில் இருக்கிறார்.

இருப்பினும் இந்த இரண்டு பாதைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்து வரும் அவருக்கு சில வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது என்பதால் சிறிது நாள் காத்திருக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News