யூகிக்க முடியாத சூப்பர் ஹிட் பட கதையில் சசிகுமார்.. சந்தானம் சொன்ன மாதிரி பொங்கலுக்கு வடகறி தான்

பாக்கியராஜ் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு. வெள்ளிவிழா கண்ட இந்த படம் 1983 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளியானது. இதில் பாக்கியராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை பாக்கியராஜ் இயக்கி இருப்பார். இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கனவே நீண்ட நாட்கள் முன்னர் முந்தானை முடிச்சு இரண்டாம் பாகம் வருவதாக பேச்சுக்கள் அடிபட்டது.

Also Read: பாக்யராஜ் இயக்கத்தில் வெள்ளிவிழா கண்ட 7 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க மிஸ் பண்ணிடாதிங்க

ஆனால் அந்த பேச்சு அப்படியே நின்று போனது. இப்பொழுது மீண்டும் அந்த பேச்சை ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் சசிகுமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கப் போகிறார்கள். இவர்களோடு சேர்ந்து முதல் பாகத்தின் ஹீரோ பாக்கியராஜும் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோ சசிகுமார் என்பது யாராலும் யோசிக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கிறது. ஏனென்றால் பாக்கியராஜ் மாதிரி அசடு வழியும் கேரக்டரில் சசிகுமார் செட் ஆவாரா என்பது தெரியவில்லை. இதுவரை இந்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கின்றனர்.

Also Read: கைத்தட்டலை தாண்டி கண்ணீரை வர வழைத்த பாக்யராஜின் 5 படங்கள்.. மறக்க முடியாத அந்த 7 நாட்கள்!

ஆனால் சுந்தரபாண்டி மற்றும் இது கதிர்வேலன் காதல் போன்ற இரண்டு படங்களை இயக்கி கவனம் பெற்ற எஸ் ஆர் பிரபாகரன் முந்தானை முடிச்சு 2 படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை பார்த்ததை விட முற்றிலும் மாறுபட்ட சசிகுமாரை இந்த படத்தில் பார்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆகையால் முந்தானை முடிச்சு 2 படம், சந்தானம் சொன்ன மாதிரி பொங்கலுக்கு வடகறி என்ற காம்பினேஷனில் அதிரடியாக தயாராக போகிறது. இதன் சூட்டிங் அடுத்த மாதம் குன்னூரில் நடக்கவிருக்கிறது. விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்