அயோத்தியின் வெற்றியை தொடர்ந்து சசிகுமாருக்கு ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. மீண்டும் சுக்கிர திசை ஆரம்பித்துவிட்டது

சசிகுமார், இயக்குனர் பாலா மற்றும் அமீரின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பின்பு சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் மாறிவிட்டார். மேலும் இவர் நடித்த படங்கள் ஆரம்பத்தில் அதிக லாபத்தை கொடுத்தது.

ஆனால் சமீப காலமாக இவருக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை என்றே சொல்லலாம். ஏன் என்றால் இவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் இவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து சினிமாவிற்கு புதுப்புது நடிகர்கள் உள்ளே நுழைந்து பெரிய அளவில் ஹிட் கொடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இப்படி ஒரு நடிகர் இருப்பதை மறக்கும் அளவிற்கு இவர் ஆகிவிட்டார்.

Also read: என்னதான் படம் நல்லா இருந்தாலும் மார்க்கெட்ல விலை போகல.. மனக்கசப்பால் சறுக்கி விழுந்த சசிகுமார்.!

ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து இப்பொழுது சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். முக்கியமாக இவர் நடித்து வெளிவந்த அயோத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் இவருக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். அத்துடன் இவர் கையில் நான்கு படங்களை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்.

அயோத்தின் வெற்றி படத்திற்கு பிறகு பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிவிட்டது. இப்படத்தை அனிஸ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்து மாதவி ஆகியோர் நடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தின் பெயரை கேட்டால்  ஒரு காமெடி படமாக இருக்கும் என்பது தெரிகிறது.

Also read: அசத்தல் கம்பேக் கொடுத்த சசிகுமார்.. காரி படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அடுத்ததாக நா நா படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகி இருக்கிறது. இதில் சசிகுமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றார்கள். இப்படத்தில் சசிகுமார் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் சரத்குமார் இருப்பது போல் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது இவர்கள் இருவரும் நானா, நீயா என்று போட்டி போட்டு நடிப்பது போல் தெரிகிறது. மேலும் இப்படத்தை சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் என்பவர் இயக்குகிறார்.

இதனை தொடர்ந்து சசிகுமார், நந்தன் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதில் முரட்டுத்தனமான மீசை தாடியுடன் பார்ப்பதற்கு பயங்கரமாக போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை உடன்பிறப்பே மற்றும் கத்துக்குட்டி ஆகிய படங்களை இயக்கிய ரா. சரவணன் இயக்குகிறார். அத்துடன் இந்த படத்திற்குப் பிறகு ஹரி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம்.

Also read: மதங்களைக் கடந்து மனிதத்தை கொண்டாடிய அயோத்தி.. 10 வருட போரட்டத்திற்கு பின் சசிகுமார் ஜெயித்தாரா?

Sharing Is Caring:

அதிகம் படித்தவை