விஜய் சேதுபதியை பின்பற்றும் சசிகுமார்.. இனிமேல் தான் இருக்கு என்னோட ஆட்டம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். இவர் இயக்குனர் பாலா மற்றும் அமீர் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமானார்.

தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் வெளியானது. இப்படம் பழமையான கதையை கொண்டுள்ளது என ரசிகர் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு வெளியான ராஜவம்சம் படமும் இதே போல் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

அதன்பிறகு, சசிகுமார், சமுத்திரகனி, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் உடன்பிறப்பு. இப்படமும் சசிகுமார் எதிர்பார்த்த அளவு அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலை சசிகுமார் கொம்பு வச்ச சிங்கம்டா, நா நா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சசிகுமார் இதில் சில படங்களின் பணிகளை முழுமையாக முடித்தும் கொடுத்துவிட்டார். நா நா படத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், சசிகுமாரின் கதாபாத்திரம் மர்மம் நிறைந்ததாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சித்ரா சுக்லா நடிக்கிறார். நா நா படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சசிகுமாரின் படங்கள் ஏதும் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் நா நா படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விஜய் சேதுபதியும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் எந்த படமும் இவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை அதேபோல்தான் சசிகுமார் பல படம் நடித்து வந்தாலும் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் இருவரும் பல படங்கள் நடித்து வருவதால் கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் இவருக்கு கை கொடுக்கும் என கூறிவருகின்றனர்