சசிகலாவை பிரபலப்படுத்துவதற்கு இவ்வளவு கோடி செலவா? வாய் பிளக்க வைக்கும் உளவுத்துறையின் ரிப்போர்ட்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, பெங்களூரில் இருந்து சென்னை வரை 420 கிலோ மீட்டர் தூரத்தை 23 மணி நேரத்தில் கடந்து வந்துள்ளார். மேலும் சசிகலாவின் வருகையை பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ததோடு, வழிநெடுக 120 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் பெங்களூருவில் தொடங்கி பல லட்சக்கணக்கான போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. அதேபோல் சசிகலா புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பெங்களூருக்கு சென்று விட்டார்களாம். அவர்களுக்கான ரூம் வாடகை, சாப்பாட்டு செலவு, போக்குவரத்து செலவு அனைத்தும் அமமுகவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாக நாடு முழுவதும் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, பெரும் தொகை  ஒதுக்கப்பட்டதாக  சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆயிரம் வரவேற்பு பேனர்கள், 100 வரவேற்புப் பாயிண்ட்டுகளில் தலா 200 கார்கள் என மொத்தம் 20 ஆயிரம் கார்கள், டிவி சேனல்களில் தொடர் நேரலை என தாறுமாறாக செலவழித்து உள்ளனர்.

sasikala

அதேபோல், வரவேற்பு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் ஆயிரம் பேர் வீதம், 120 இடங்களில் ஏறத்தாழ 1.20 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மட்டும் சாப்பாட்டு செலவு, ஒருவருக்கு 1500 ரூபாய் வீதம், 20 கோடியே 60 லட்சம் என்றும், கார்களுக்கான செலவு 20 கோடி என்றும், பேனர்களுக்கு 50 லட்சம் ரூபாய் என்றும், 10 லட்ச போஸ்டர்களுக்கு ரூபாய் 6 கோடி என்றும், வழியெங்கும் நடத்தபட்ட மேளம், டப்பாங்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வர குரூப் என செலவு 10 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் தமிழகத்தில் இருந்து  50 பஸ்களில் ஏற்றி வரப்பட்ட நபர்களுக்கான பேட்டா மற்றும் சாப்பாட்டுச் செலவு 12 கோடி என்றும், பஸ் வாடகை 5 கோடி என்றும், வானவேடிக்கை, பூமாலை, இதர செலவுகள் இரண்டு கோடி என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் பெங்களூருவுக்கு முன்கூட்டி வந்து தங்கிய 500க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கான ரூம் வாடகை, சாப்பாட்டு செலவு, போக்குவரத்து செலவு ரூபாய் ஒரு கோடி என்றும், 22 மணி நேரம் வேறு நிகழ்ச்சிகள் எதையும் ஒளிபரப்பாமல் தொடர்ந்து சசிகலாவின் வருகையை ஒளிபரப்ப ரூபாய் 120 கோடி செலவானது என்றும் கூறப்படுகிறது.

ஆக, 23 மணி நேரத்தில் 196 கோடி வரை செலவு செய்துள்ளனர்.  சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மணிக்கு 5 கோடியே 60 லட்சம்  ரூபாயை தண்ணி போல செலவழித்துள்ளனர் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்