அரசியலுக்கு முழுக்கு போட்ட சசிகலா.. ஜெயலலிதாவின் ராஜ தந்திரத்தை கையில் எடுக்கும் சின்னம்மா

அரசியலில் இருந்து விலகப் போவதாக சசிகலா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தண்டனை காலம் முடிந்து அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விலகப் போவதாக கூறியிருப்பது அமமுக தொண்டர்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் வார்த்தைகளை ஜெயலலிதாவும் ஒரு காலத்தில் சொல்லிதான் பல முறை தமிழக முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1987-ல் ஜெயலலிதா இதேபோன்று அரசியலில் விருப்பம் இல்லை என்றும் விலகிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். பின்பு அதிமுக கட்சி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிய போது பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.

1991 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா. இதனால் சசிகலா, நடராஜன், ஜெயலலிதா ஆகிய 3 பேர் மட்டும் அறிந்த ராஜினாமா என்ற அரசியல் சூழ்ச்சியை தற்போது சசிகலாவும் கையில் எடுத்துள்ளார்.

sasikala-entry
sasikala-entry

தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் தீவிர அரசியலில் சசிகலா இறங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாம். ஏனென்றால் அமமுக கட்சியின் சார்பில் சசிகலா போட்டியிட்டாலும் அதிமுகவின் ஓட்டு பிரியும், இதனால் அம்மா தலைமையிலான கட்சி அதிக நெருக்கடிகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.

இதனால் கூட சசிகலா விலகுவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நான் பதவிக்காக அதிகாரத்திற்காக ஆசைப்பட்டதில்லை என்பதையும் அறிக்கையில் தெரிவித்துள்ளார் சசிகலா.