ரஜினிகாந்தை சந்தித்த சசிகலா. எதற்காக என்று குழம்பும் பெரும்புள்ளிகள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அவர் சிறிது காலம் ஓய்வுக்குப் பின் தன்னுடைய நடிப்பை தொடர போவதாகவும், இதற்காக கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்தை, அங்கேயேபோய் சந்தித்துள்ளார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா விடுதலை ஆனதும், தான் அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகலா தற்போது அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, மீண்டும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளார். ஜெயலலிதா சமாதி போன்ற இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தியும் வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை சூப்பர் ஸ்டாரை சந்தித்த அவர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். கலையுலகின் பெரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்தின் மனைவி லதாவும் உடனிருந்தார்.

Rajini-Cinemapettai.jpg
Rajini-Cinemapettai.jpg

சசிகலா, ரஜினிகாந்தை சந்தித்ததை அறிந்த பலரும் இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்றும், சசிகலா ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி விட்டார் என்றும் கூறிவருகின்றனர்.