தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க ஆசைப்படும் சார்பட்டா நடிகர்.. விஷாலோட வில்லன் ஆச்சே!

ஒரு இயக்குனரின் முதல் படம் வெற்றிப்படமாக அமைந்தால் அவரது அடுத்த படம் மீதும் அதே எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அனைத்து இயக்குனர்களும் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்குவதில்லை. ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித் கவனம் ஈர்த்து வருகிறார்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது சார்பட்டா பரம்பரை படம்.

இப்படத்தில், குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ளார். அவருடன் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

எழுபதுகளில் சென்னையில் பிரபலமாக இருந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி படத்தின் கதை அமைந்துள்ளது.

ஆர்யாவின் 30வது படமான சார்பட்டா பரம்பரை படத்தின் கபிலன் கேரக்டருக்காக, மூன்று விதமான உடல் மொழிகளுடன் உடற்பயிற்சி செய்து குத்துச் சண்டை வீரருக்கான உடற்கட்டுடன் உருமாற்றி நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்து ஆர்யா அளித்த பேட்டியில், நடிகர் விஜய்யுடன் வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். தற்போது விஷாலுக்கு எதிராக ‘எனிமி’ படத்தில் வில்லனாக ஆர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

arya pa ranjith john vijay sarpetta
- Advertisement -