சார்பட்டா வசனத்தை வைத்து ஆவேசமாக பதிவிட்ட தனுஷ் பட இயக்குனர்.. திரும்ப வந்துட்டேன்னு சத்தமா சொல்லு!

துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தனது 22 வயதில் இயக்குனர் என்ற அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெற்றவர் கார்த்திக் நரேன். அதற்கு பின்னர் அரவிந்த் சாமியை வைத்து நரகாசுரன் என்ற படத்தை எடுத்து பண பிரச்சனையால் வெளிவராமல் காத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் அருண் விஜய்யை வைத்து மாபியா Chapter 1 என்ற படத்தை எடுத்து தியேட்டர்களில் வெளியிட்டார்.

ஆனால் இதில் வரும் சண்டைக் காட்சிகள் எதுவுமே எதார்த்தமாக இல்லாததால் படுதோல்வி அடைந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஹாலிவுட் வரை கொடிகட்டிப் பறக்கும் தனுஷை வைத்து மாறன் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் கார்த்திக் நரேனுக்கு தனுஷ்  மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் படத்தின் வசனத்தை பதிவிட்டுள்ளார். போய் சொல்லு இனி இது என்னுடைய நேரம் என்ற வசனத்தை வெளியிட்டு சினிமாவில் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்பது போன்ற ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

karthik-naren
karthik-naren

அதாவது வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சத்தமா சொல்லு. இரண்டு படங்களில் விட்ட சரிவை தனுஷை வைத்து கண்டிப்பாக சரி செய்து விடுவேன் என்பது போன்று சவால் விட்டுள்ளார் கார்த்திக் நரேன். இந்த சவாலில் வெற்றி கிடைக்குமா.? என்பது படம் வெளிவந்தால் தான் தெரிய வரும் பொருத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -