பக்கா 80ஸ் ஹாலிவுட் ஹீரோ போல் மாறிய ஆர்யா.. பட்டையை கிளப்பும் பா ரஞ்சித்தின் சார்பட்டா பட போஸ்டர்

ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் ஆர்யா. சமீபகாலமாக ஆர்யா நடிக்கும் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.

ஒரே மாதிரி காதல், காமெடி, ரொமான்ஸ் என ரசிகர்களுக்கு போர் அடிக்கும் விதமாக திரைப்படங்கள் செய்து கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் ஆர்யா படம் என்றாலே சினிமா தியேட்டருக்கு போக வேண்டாம் என முடிவு செய்திருந்தார்கள் ரசிகர்கள்.

அதை மாற்றி சமீபத்தில் வெளியான மகாமுனி படத்தின் மூலம் என்னால் நல்ல படங்களில் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டினார். அதனைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் அடுத்ததாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

பா ரஞ்சித் இயக்கத்தில் வடசென்னை வாழ் பாக்ஸிங் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியும், அதற்குள் இருக்கும் அரசியல் பற்றியும் அதிரடியாக உருவாகியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்திற்காக ஹாலிவுட் நடிகர்கள் ரேஞ்சுக்கு உடல் எடையை ஏற்றி மிரட்டியுள்ளார் ஆர்யா.

நீண்ட நாட்களாக சார்பட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்குப் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வராததால் ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் சார்பட்டா படத்தை ரசிகர்கள் மறந்து விட்டனர்.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் கேரக்டர் பற்றிய வீடியோ ஒன்றை நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக பா ரஞ்சித் ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

sarpatta-poster
sarpatta-poster
- Advertisement -