சார்பட்டாவில் என்னைக்கவர்ந்த கதாபாத்திரம்.. Mr.Madras சரத்குமார் வெளியிட்ட பதிவு!

தமிழ் சினிமா ரசிகர்களிடம் சமீபகாலமாக பாராட்டு பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா கபிலன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் டான்சிங் ரோஸ், வேம்புலி, ரங்கன் வாத்தியார் மற்றும் மாரியம்மா போன்ற அனைத்து கதாபாத்திரம் ரசிகர்கள் பிடித்துப் போனதால் தற்போது பலரும் இப்படத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் இப்படத்தை பற்றிய தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது ஆர்யா மற்றும் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இருப்பினும் தற்போது மற்றொரு பிரபலம் படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளார் மேலும் தனக்கு பிடித்த கதாபாத்திரத்தையும் கூறியுள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றன ஆனால் சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

shabeer kallarakkal
shabeer kallarakkal

தற்போது சரத்குமார் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தை பற்றியும் படத்தில் நடித்த கதாபாத்திரத்தை பற்றியும் கூறியுள்ளார். அதில் படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிப்பை பாராட்டி உள்ளார், மேலும் படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் நடிப்பும் அற்புதமாக இருந்தது என கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை வென்ற சரத்குமார் தற்போது வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு கதாபாத்திரத்தை புகழ்வது என்பது எளிதல்ல அந்த அளவிற்கு டான்சிங் போஸ் கதாபாத்திரம் அவரை உற்ச்சாகப் படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சிறிய நேரத்தில் வந்தாலும் டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் மனதில் நிற்கக் கூடிய அளவிற்கு சபீர் நடித்திருந்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த கதாபாத்திரத்தை இவர் செய்த கடின உழைப்பையும் பயிற்சியும் பாராட்டிப் கூறியுள்ளார்.

- Advertisement -