விவகாரமான கதையில் நடிக்கும் கமலஹாசனின் எக்ஸ் மனைவி.. 60 வயதில் இப்படி ஒரு மோகமா.?

சமீபத்தில் கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகா ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வேலை பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். சரிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன்பிறகு ஹிந்தி, மராத்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கமலஹாசனை திருமணம் செய்து கொண்டார். சரிதாவுக்கு பிறந்தவர்கள்தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். ஒரு சில காரணங்களால் கமல்ஹாசன், சரிகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் சரிகா மாடர்ன் லவ் மும்பை என்ற அந்தாலாஜி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆறு காதல் கதைகள் கொண்ட இந்த அந்தாலாஜி இத்திரைப்படம் அமேசான் திரையில் வெளியாகியுள்ளது. இதில் மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ் என்ற குறும்படத்தில் சரிகா, கணவனை விபத்தில் பறிகொடுத்து நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது 60 வயதான அவருக்கு 30 வயதான இளைஞன் குணால் என்பவருடன் நட்பு ஏற்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் குணால் சரிகாவை காதலிக்கிறேன் என கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சரிகா முதலில் குணாலை கண்டித்து அனுப்பிவிடுகிறார். ஆனால் அதன் பிறகு சரிகாவின் மனதுக்குள்ளேயே பல கேள்விகள் எழுகிறது. அதன் பிறகு ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் குணாலை வீட்டிற்கு அழைக்கிறார்.

அதன்பிறகு சரிகா என்ன முடிவு எடுக்கிறார் என்பதுடன் படம் முடிவடைகிறது. காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை இப்படம் உணர்த்துகிறது. தற்போது செய்தித்தாள்களில் இது போன்ற பல செய்திகளை நாம் படிக்கின்றோம். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

ஆனால் இப்படத்தில் சரிகா தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய ஏக்கம், காதல், பரிதவிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது பியூட்டிஃபுல் ரிங்கிலீஷ் குறும்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.